சிந்தனைக்கு





1. வென்ற பிறகு கிடைக்கும் பாராட்டை விட, வீழ்ந்த பிறகு கிடைக்கும் ஊக்கமே பலருடைய முன்னேற்றத்திற்கு காரணம்.


2. எதுவுமே சரியில்லாத போதும் எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் கிறிஸ்தவ வாழ்க்கை.


3. உண்மைகள் எல்லாவற்றையும் நீங்கள் சொல்ல வேண்டும் என்பதில்லை. ஆனால் நீங்கள் சொல்பவை எல்லாம் உண்மைகளாக இருக்கட்டும்.


4.என்னை "ஏன்"னு கேட்க ஆளில்லை என்ற பதில், இளம்பருவத்தில் கர்வமாகவும், முதுமையில் பரிதாபமாகவும் இருக்கும்.


5.யாரால் திருப்பிச் செய்ய முடியாதோ அவர்களுக்குச் செய்வதே பேருதவி.


6.பசித்த வயிறு, பணமில்லா வாழ்க்கை, பொய் உறவுகள் இவைகள் கற்றுத்தரும் பாடத்தை எவராலும் கற்றுத்தர முடியாது.


7.சொன்ன ஒரு சொல், விடுபட்ட அம்பு, கடந்துபோன வாழ்க்கை, நழுவ விட்ட சந்தர்ப்பம் ஆகிய நான்கும் மீண்டும் வராது.


8.தூக்கி வீசப்பட்ட இடத்தில் மரமாக வளருங்கள், வீசியவர்களே அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு.


9.உப்பு விற்கப்போனா மழை பெய்யுது,மாவு விற்கப்போனா காத்தடிக்குதுன்னு

புலம்பிட்டே இருக்கககூடாது இரண்டையும் கலந்து போண்டா போட்டு வித்துட்டு போயிட்டே இருக்கணும். இது தாங்க வாழ்க்கை.


10.கடந்து போன நாட்களுக்காக கவலைப்படாதீர்கள், நடந்து செல்ல நல்ல நாட்கள் நிறைய உண்டு.