இந்த உபவாச நாட்களில் எதை விட வேண்டும்?இறைச்சியா? இனிப்பா? ருசி உள்ள உணவா? எது?



⛔ முறுமுறுப்பையும், குறை சொல்லுதலையும் விட்டுவிட்டு நன்றி உணர்வை வெளிப்படுத்துங்கள். (பிலிப்பியர் 2:16)


⛔ கசப்பை விட்டு விட்டு மன்னிப்புக்கு நேராய் திரும்புங்கள். (எபேசியர் 4:31, 32)


⛔ கவலையை விட்டுவிட்டு தேவன் மேல் நம்பிக்கை வையுங்கள்

(மத்தேயு 6:25)


⛔ வெறுப்பை விட்டு விட்டு தீமைக்கு நன்மை செய்யுங்கள். 

(லூக்கா 6:27)


⛔ கோபத்தை விட்டுவிட்டு பொறுமையை தரித்துக் கொள்ளுங்கள். 

(நீதிமொழிகள் 15:18)


⛔ புறங்கூறுதலை விட்டுவிட்டு உங்கள் நாவை கட்டுப்படுத்துங்கள். 

(நீதிமொழிகள் 21:23)


👍🏻 இவை மட்டும் அல்ல, நாம் அனைவருமே ஆண்டவரின் பிள்ளைகள் என்பதை இவ்வுலகிற்கு நிரூபித்து காட்ட வேண்டும்.