சித்தீம் மரம்- அத்திமரம்
சிறப்பான சித்தீம் மரம்
அண்ணாந்து பார்க்க வைக்கும் அத்திமரம்:
சித்தீம் மரம்: எத்தனையோ, உயர்ரக மரங்கள் இருக்க, தேவ வாசஸ்தலத்திற்கானவைகளைச் செய்ய நிர்ணயிக்கப்பட்டது. எங்களைத் தானே!
அத்திமரம்: இயேசு நின்றது, அண்ணாந்து பார்த்தது, சகேயுவின் குடும்பத்திற்கு இரட்சிப்பை அருளியது எல்லாமே எங்கள் அருகில் நின்றதால் தானே !
சித்தீம் மரம்: உடன்படிக்கைப்பெட்டி, பலிபீடம், மேஜை, பலகை இன்னும் பல செய்யப் பயன்படுத்தியது எங்களைத்தானே!
அத்திமரம்: எனக்கு செய்ததை வைத்து சுட்டிக்காட்டினார் (மத் 21: 19) விசுவாசத்தோடு கேட்டால் கிடைக்கும் என்பதை பதிய வைக்கக் காரணம் நாங்களே!
சித்தீம் மரம்: எங்கள் பெயர் வேதத்தில் வருவது அரண்மனையிலிருக்கிற ராஜாவுக்காக அல்ல. பரிசுத்த ஸ்தலத்திலுள்ள ராஜாதி ராஜாவுக்காக என்றால் பாக்கியம் பெற்றவர்கள் நாங்கள் தானே!
அத்திமரம்:எங்கள் நிழலில் தானே பயமில்லாமல் குடி இருந்தார்கள் (Iஇராஜா 4:25).
வனாந்தரத்திலும் சித்தீம் மரங்களாகிய எங்களை உண்டாக்கி, தம் வல்லமையை, நிருபித்த தேவனின் கரம் உங்களோடிருப்பதாக.