இயேசுவின் குமுறல்கள்



🌌 விண்ணைப் படைத்தேன்;வார்த்தையால் மண்ணையும் படைத்தேன்; ஏன் என் சாயலால் உன்னையும் படைத்தேனே! ஆனால் நீயோ,

என் சத்தம் மறந்தாய்; பரிசுத்தம் இழந்தாய்; தேவசித்தம் மாற்றினாய்; நித்தம் நித்தம், பாவத்தில் தத்தளித்து, தள்ளாடும் நீ, செத்து மடியக் கூடாதென என்னைத் தத்தம் செய்து, இரத்தம் சிந்தினேன்.


❤️ நீ மேன்மை பெற நான் தாழ்மை தரித்தேன்; நீ பெலன் பெற நான் பெலவீனமானேன்; நீ உயிர் பெற நான் உருக்குலைந்தேன்; நீ வாழ்வு பெற நான் வாழ்விழந்தேன்; இத்தனையும் பொறுத்து இன்னல்கள் சகித்தேன் ஏன் தெரியுமா? நீயும், நானும் உயிரும், உடலுமாய் மாறிட மாட்டோமா என்பதற்காகத் தானே!


✝️ நான் சிலுவையை ஏற்றால், நீ என்னை ஏற்பாய் என நினைத்தேன்- நீயோ தினம் தினம் என்னை சிலுவையில் ஏற்றினாய். முட்கிரீடம் சூட்டும் போது வலித்தது தான். அதைவிட, இப்போது நீ சிலுவையில் ஏற்றுவது என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லையே!


👉🏻 உன்னை மீட்கும் போது உன் அறிவு, அழகு, அந்தஸ்து எதையும் பார்க்கவில்லை. பாவியானாலும் நீதான் எனக்கு வேண்டும் என எண்ணினேன்-ஆனால் நீயோ பணம், பதவி, பந்தம் என ஓடி விட்டாய்.


😌 அன்று இவன் கிறிஸ்து தானா? எனக் கேட்கும் போது பொறுத்துக் கொண்டேன். இன்று இவன் என்ன கிறிஸ்தவனா என உன்னைப் பார்த்து கேட்கும் கேள்வியை என்னால் பொறுக்க முடியவில்லையே!


மகனே! மகளே- இதைவிட_ _ _ _ முள்ளில் உதைப்பது உனக்கு கடினம். அப்போஸ்தலர் 9:5