பெண்களின் பெருமை



 பெண் என்பவள் யார்?

 பெண் என்பவள் வீட்டிற்கு தலையல்ல; தலைக்கு கிரீடமானவள்.


 பெற்றோரை நினைவில் சுமந்தவள்; கணவனை இதயத்தில் சுமப்பவள்; குழந்தையை கருவில் சுமந்தவள்; குடும்ப பாரத்தை தலையில் சுமப்பவள்; இவை அனைத்துமே  சுகமான சுமை என எண்ணுபவள்.


இது மட்டுமா?


 குடும்பத்தை கட்டி எழுப்புபவள்; குழந்தைகளுக்கு அறிவொளி தருபவள்; மனைகாத்து, மற்றவர் நலன் காப்பவள்; மனம் தளராது மடியும் வரை மற்றவர்களின்

மகிழ்ச்சிக்காக வாழ்பவள்.


இன்னும் பல....


அதிகாலை எழுந்து, ஆண்டவரின் பாதம் அமர்ந்து, குடும்பத்திற்காய் ஓடி, ஓடி உழைத்து, ஓடாய்த் தேய்ந்து, கணவனுக்கு பார்த்து, பார்த்து பணிவிடை செய்து, தேவனுக்கு பயந்தும் வாழ்பவள்


என்ன? ஆண்மக்களே!

 மனைவியை மனதார நேசியுங்கள்; செய்யும் செயலுக்காய் ஊக்கப்படுத்துங்கள்; நல்லதொரு மனைவிக்காய் ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்.