🎄 இயேசு என்னும் பூமான்:🎄




🎄மரியாளின் மைந்தன் மன்னிப்பின் மகத்துவத்தை மனுக்குலத்துக்கு தந்த மகத்துவர். 


🎄அன்பையும், அறத்தையும் அமுதமாய் ஊட்டிய அன்பின் வடிவம்.


🎄அறியாமையை அகற்றிய அறிவொளி நட்சத்திரம். 


🎄கல்வாரி மேட்டினில் கால்வலிக்க நடந்து சொல்லொண்ணா வேதனையை சுமந்து தீர்த்த தேவாட்டுக்குட்டி. 


🎄"சகிப்பு' என்னும் விதை விதைத்து "அஹிம்சை" மரத்துக்கு ஆணிவேர் தந்தவர்.


🎄மனித நேயத்தை புனிதமாக்கியவர்.


🎄மாட்டுத்தொழுவத்தில் அல்ல; மனித இதயங்களில், மீண்டும் பிறக்க வேண்டும். "இயேசுவானவர்" வாசம் செய்ய நம் "இதயக்கதவை" திறந்து கொடுக்க ஆயத்தமாவோமா!