☦️☦️ சிலுவை ☦️☦️
☦️ சிலுவை என்பது 2 மரக்குச்சிகளின் கூட்டல் குறி அல்ல ! கல்வாரி உச்சியில் கிறிஸ்துவின் இரத்தத்தில் மானிடரின் இரட்சிப்புக்காக_ _ _ _
☦️ அந்த அன்பின் இரட்சிப்பை அறிவிக்க அன்றைய அப்போஸ்தலர்கள் அர்ப்பணிப்போடு எழுந்தார்கள். அவர்களின் பாதை ஆணிப்படுக்கையில் நடப்பது போன்றது.
☦️ குருவிக் கூட்டை நெருப்பை ஊற்றி கொளுத்துவது போல் ஒரு வீட்டுப் பறவைகள் எரிக்கப்பட்டதும் இம்மண்ணில் தானே!
☦️ ஆனால் இன்றோ! நமக்குள்ள ஆத்தும பாரத்தை என்னவென்று சொல்வது? கற்பனைகளைக் கடைபிடிக்கும் மனிதர்கள் கூட காணாமல் போகிறார்களே! எங்கே?
☦️ பக்கத்து வீட்டின் இரட்சிப்பை பற்றி பாராமுகமாய் அல்லவா இருக்கிறோம்? அவர்கள் இருப்பது இருளில் தானே!
ஆகவே,
☦️ ஆத்தும பாரத்தை மனதில் கொண்டு சிலுவை கொடியை பிடித்து முன்னேறுவோம் ! முன்னேற்றுவோம்!!