வாழ்க்கை

கிறிஸ்தவ வாழ்வு:

கிருபையால் தொடங்கி, 

கிருபையில் தொடர்வது,

கிரியையால் வெளிப்படுவது. 


வாழ்க்கையில் 4 விஷயங்களை உடைத்து விடாதீர்கள்; 

1. நம்பிக்கை, 2. சத்தியம், 3.உறவு,  4. இதயம்; 


ஏனெனில், இதில் எதையாவது உடைத்தால், சத்தம் அதிகம் கேட்காது; வலி அதிகமாக இருக்கும்.


கிறிஸ்தவ வாழ்வு என்பது:-

கரையில் நிறுத்தப்பட்ட கப்பல் போன்றதல்ல; ஆழமான ஆழிக்குள், செலுத்தப்பட்ட படகு போன்றது.


💊 வாழ்க்கை என்பது வலி நிறைந்தது. அதில் மருந்திடுவோர் சிலர்; அதை இரணமாக்குவோர் பலர்; அதை குணமாக்குபவர் என் இயேசு ஒருவரே.


🔥 தீப்பெட்டியின், கடைசிக்

 குச்சியை பற்றவைப்பதில் உள்ள கவனம், முதல் தீக்குச்சியிலே இருந்தால், வாழ்க்கையை எளிதில் ஜெயித்து விடலாம்.