ஊழியமா? ஜீவியமா?




1.ஊழியம் செய்யாவிட்டால் தேவ நாமம் தூஷிக்கப்படாது. ஆனால் ஜீவியம் சரியில்லை எனில் தேவ நாமம் தூஷிக்கப்படும்.


2.ஊழியம் மற்றவர்களை பரலோகத்திற்கு தகுதிப்படுத்தும். ஆனால் ஜீவியமோ நம்மை பரலோகத்திற்கு கொண்டு செல்லும்.


3. ஊழியம் செய்தால் ஆசீர்வாதம் என்பது சிலரின் கருத்து. ஆனால், ஜீவியமே உண்மையான ஆசீர்வாதம் என்பது வேதத்தின் கருத்து.


4. ஊழியத்தால் அநேகர் சபைக்கு வரலாம். ஆனால் நம் ஜீவியத்தின் மாற்றத்தால் மட்டுமே சபையில் நிலைத்து நிற்க முடியும்.


5. ஊழியம் செய்ய எல்லோரும் அழைக்கப்படவில்லை. ஆனால் எல்லோரும் கிறிஸ்துவைப் போல் வாழ கட்டளையிடப்பட்டுள்ளது.


6. ஊழியம் குறிப்பிட்ட நேரம் மாத்திரமே. ஆனால் ஜீவியமோ வாழ்நாள் முழுதும்....


7. ஜீவிய தூய்மையின் ஊழியரே "உண்மையும், உத்தமுமான ஊழியன்" என்று அழைக்கப்பெறுவர்.


மேற்கூறியவற்றை எல்லோருமே சிந்திக்க இது ஒரு வாய்ப்பு தானே!


"கர்த்தருக்கென்றே நல்மனதோடே"..

எபேசியர் 6:8