வாலிபர்களே!
வசனத்தின்படி வாழுங்கள்; வழிகாட்டி கம்பம் வேதமே.
வாழ்வும், தாழ்வும் இணைபிரியா நண்பர்கள்.
நாவும்,நல்வாழ்வும் உடன்பிறந்த சகோதரிகள்.
நம்பிக்கையே வாழ்வின் கைப்பிடி;அது உடைந்து போக விடாதீர்கள்.
சுத்த மனச்சாட்சியே சிறந்த தூக்க மருந்து.
சிலுவை பாரமானது தான். நுகம் காலுக்கு கட்டு தான்.
தேவனுக்காக தியாகம் செய்வது இழப்பு அல்ல; அது ஆதாயம்.
தோல்வியால் வாழ்வே முடிந்துவிட்டது என எண்ணாதீர்கள். இது வெற்றியின் ஆரம்பம்.
கண்ணாடியை போல் உடைந்து விடாதீர்கள். சேலம் எஃகு இரும்பைப் போல் இருங்கள்.
வாழ்வு சிறியது தான் ஆனால் தரிசனத்தோடு வாழ்ந்து சாதனை படைத்தால் போதும்.
கர்த்தரை நம்புங்கள்;கடினமாய் உழையுங்கள்;அப்போது காற்று அடைத்த பலூன் போல் மேலெழும்பி பறப்பீர்கள்.