🦋 🦋 தேவனின் பதில்கள்🦋🦋
ஆண்டவரே....
1️⃣ உமக்காக இரத்த சாட்சியாக மரிக்க விரும்புகிறேன்.
Answer: முதலில் சுயத்திற்கு மரித்து எனக்கு சாட்சியாக இரு.
2️⃣ நித்தியத்தில் உம்மோடு இருக்க விரும்புகிறேன்.
Answer: இந்த உலகத்தில் நான் உன்னோடு இருக்கிறேனா என்று பார்த்து செயல்படு.
3️⃣ அழிந்து போகிற ஆத்துமாக்களை ஆதாயம் பண்ண விரும்புகிறேன்.
Answer: உன் ஆத்துமா அழிவிலிருந்து தப்பிவிட்டதா என்பதை உறுதிப்படுத்து.
4️⃣ உமக்காக எதையாவது செய்ய விரும்புகிறேன்.
Answer: எனக்காக அல்ல. நான் செய்யச் சொன்னதை முதலில் செய்.
5️⃣ உம்முடைய சத்தியத்தை அநேகர் ஏற்றுக் கொள்ளவில்லையே ஏன்?
Answer: சத்தியத்தை அறிந்த நீ அதன்படி நடக்காதது ஒரு காரணம்.
6️⃣ உம்முடைய வேதத்தை தினமும் படிக்கிறேன்.
Answer: படித்தபடி வாழ விரும்பாத உன்னுடைய வேத வாசிப்பு வீண் வேலையாகப் போகிறதே!