அபிகாயில்
1. குடும்பத்தின் மேல் வரவிருந்த பொல்லாங்கை தடுக்கப் புறப்பட்டாள்.
2. எதிரிட்டு வந்தவர்களின் முடிவை தணிக்க தீவிரமாய் செயல்பட்டாள்.
3. தன் குடும்பத்திற்கு உரியவைகள் அழிக்கப்படாமல் தப்புவித்தாள்.
4. ஒரே நாளில் இழக்க இருந்ததை ஞானமாய்ப் பாதுகாத்தாள்.
5. நடக்க இருந்த பாதகங்களை சாதகங்களாய் மாற்றினாள்.
6. புலம்பலின் சத்தம் பூரிப்பாக்கப்பட சுறுசுறுப்பாய் செயல்பட்டாள்.
7. ஏற்ற முடிவுகளை ஏற்ற நேரத்தில் நேர்த்தியாய் நிறைவேற்றினாள்.
8.பயம், தயக்கத்தைத் தாண்டி தைரியமாய் எதிர்த்து நின்றாள்.
9.குடும்பத்திற்கு வந்த எதிர்மறையான முடிவை மாற்றியமைத்தாள்.
கடைசியாக சகோதரிகளே! தேவகிருபையைப் பெற்று அபிகாயில் செயல்பட்டதைப் போல, நாமும்
தேவனுக்குப் பிரியமான வாழ்க்கை வாழ்வோம்!
1 சாமுவேல் 25:18 to 36