வாழ்வின் கடைசி அத்தியாயங்கள்

🌟 எந்த நிலையிலும் தன் கையே தனக்கு உதவி என்ற எண்ணத்தோடு வாழுங்கள்.



🌟 குழந்தை வளர்ப்பில் மகன் மகள் இருவருக்குமே எந்த அறிவுரையும் கூறாதீர்கள்.


🌟 என் பிள்ளை என் பிள்ளை என்று பதறாதபடி அவர்கள் சிறகு முளைத்த பறவைகள் என அமைதியாயிருங்கள்.


🌟 "பொருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லை" ஆகவே சேமிப்பை பத்திரப்படுத்தி வையுங்கள்.


🌟 வியர்வை, இரத்தம் சிந்தி பிள்ளைகளை வளர்த்திருந்தாலும் சொல்லிக் காட்டாதீர்கள். உங்கள் கடமையைத் தான் செய்தீர்கள்.


🌟 கூட்டுக் குடும்பம் சிதைந்து போன தலைமுறையில் வாழ்கிறோம் என்பதை மறவாதீர்கள்.


🌟 அவர்களின் ஆடம்பரத்தை விமர்சிக்கவோ, சேமிப்பின் அவசியம் பற்றியோ பேசாதீர்கள்.


🌟 அவர்கள் வாழ்வது. உங்களைப் போல் போராட்ட வாழ்க்கை அல்ல, நவீன கார்ப்பரேட் வாழ்க்கை என எண்ணுங்கள்.


🌟 பேரப்பிள்ளைகளிடம் அதிகபாசம், அதிக ஆசையை தவிர்த்திடுங்கள்.


🌟 உங்களை விட உங்கள் பிள்ளைகள் அறிவு, திறமையில் மிகச் சிறந்தவர்கள் என்பதை மனதில் வையுங்கள்.