'கைப்பேசி'..'இல்லை



📱நேரமில்லை, பணமில்லை, அலைய முடியவில்லை என்ற சாக்குபோக்கு சொல்லவே இடமில்லை இந்த நவின யுகத்தில். யோசிக்கிறீர்களா?


📱வெளிநாட்டில் பிறந்த பேரக்குழந்தையை அன்றே பார்ப்பதும் கஷ்டமில்லை; பெரிய ஆட்களின் மணக்கோலத்தை மறுநிமிடமே பார்ப்பதும் கஷ்டமில்லை; ஜெபக் கூடுகை எங்கு நடந்தாலும் கலந்து கொள்வதும் கஷ்டமில்லை. காரணம் - நான் தானே! புரிந்திருப்பீர்கள்!!


📱கிளிக் செய்து காலை முதல் இரவு வரை என்னை எத்தனை முறை பார்த்தீர்கள் என்பது உங்கள் மனதிற்கு மட்டுமல்ல, Everything God knows! அதே சமயம், தேவன் செய்த அற்புத அடையாளங்கள் எத்தனை முறை கிளிக் ஆகி இருக்கிறது உங்கள் இதயத்தில்?

மகத்துவமான கிரியைகள்..... (உபாகமம் 11:7)


📱என்னில் பதிவாகியுள்ள அந்தரங்க இரகசியங்களை அழித்து விட்டு, இப்போதே அவரண்டையில் வரமாட்டீர்களா? என ஏங்கி தவித்துக் கொண்டிருக்கிறார்!

கர்த்தரின் கண்கள்.....(நீதிமொழிகள் 15:3)


📱 அன்று எப்போதோ ஒரு போட்டோ, இன்று எப்பவுமே போட்டோ தான். என்னத்தை சொல்ல? அன்று யோசேப்பு, யோசுவா போன்றவர்களை வைத்து அசதாரணமானவைகளை நடத்திய தேவன் இன்று நம் மூலம் அசாதாரணமானவற்றை நடத்த ஏக்கப் பெருமூச்சோடு நிற்கிறார்!

ஆகவே,

அவரின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற நம்மை நாமே அர்ப்பணிப்போமா!!