சிந்தனைக்கு சில வரிகள்
சிந்தனைக்கு சில வரிகள்:🦋🦋🦋
🦋 வாய் தவறி விழும் வார்த்தை, கை தவறி விழும் கண்ணாடியை விட கூர்மையானது.
🦋 சோகமும், துன்பமும் வாழ்வில் நல்ல பாடத்தையே கற்றுத் தருகிறது.
🦋 யாரும் நம் கண்ணீரை பார்ப்பதில்லை, கவலையை பார்ப்பதில்லை, வலிகளை பார்ப்பதில்லை. ஆனால் எல்லோரும் நம் தவறை மட்டுமே பார்க்கிறார்கள்.
🦋 எது வந்தாலும் ஏற்றுக்கொள், எது வந்தாலும் விட்டுவிடு- ஏனெனில் இந்த உலகில் எதுவும் நிரந்தரமில்லை.
🦋 மனிதர்கள் நம்மோடு இருப்பதை, விலகுவதை காலம் முடிவு செய்வதில்லை. அவரவர் வார்த்தையும், நடத்தையும் தான் முடிவு செய்யும்.
🦋 மனிதர்கள் நம் அன்பை புறக்கணிக்கலாம். நம் பேச்சை புறக்கணிக்கலாம்- ஆனால் நம் ஜெபத்திற்கு எதிர்த்து நிற்க முடியாது.
🦋 மனிதனும், வாழை மரமும் ஒன்றுதான்; தேவைப்படும் வரை தான்; தேவை முடிந்தவுடன் வெட்டி வீசி விடுவார்கள்.
🦋 ஆனால், கடைசி வரை நம்மை கைவிடாமல், நமக்கு உற்றதுணை, ஏற்றதுணை, நிரந்தரதுணை நம் கர்த்தர் ஒருவர் மட்டுமே!