👩❤️👨👩❤️👨👩❤️👨 திருமணம் 👩❤️👨👩❤️👨👩❤️👨
❤️ திருமணம் என்பது நறுமணம் கமழும் அழகிய பூஞ்சோலை; இருமனம்
ஒருமனப்பட்டால் தான் இல்லறமே பரலோகம்.
❤️ அன்பு ஒன்றே மணவாழ்விற்கு மையப்புள்ளி; துன்ப அலைகள் சூழ்ந்திடும் போது வாழ்க்கை கடலை கடக்க உதவும் படகு அது.
❤️ ஒருவரையொருவர் புரிந்து, விட்டுக் கொடுத்து, இயேசுவின் துணையோடு வாழ்வதே இனிய இல்லற வாழ்வு.
❤️ திருமணமென்னும் தெய்வீக உறவு புனிதமானது; தேவன் இணைத்த இந்நல்வாழ்வை மனிதன் பிரிப்பதென்பது பெரும்பாவம்.
❤️ இல்லறம் என்னும் இனிய மாளிகையை இருவராய் இணைந்து கட்டி எழுப்பி, கரிசனையுள்ள கர்த்தரின் கரம் பிடித்து நடந்து மரணம்வரை மணமொத்து வாழ்வதே திருமண வாழ்க்கை.
😇 தேவன் இணைத்ததை.....
மத்தேயு 19:6