🎊🎉 உயிர்ப்பின் பண்டிகை:🎉🎊
🎉 இன்று, இயேசு, உயிர்த்த நாள்; மரணம், மரித்த நாள்;
அன்று, சிலுவை மரணம், சிலரை சிலிர்க்க வைத்தது; பலரை வியக்க வைத்தது.
🎉 இயேசுவின் உயிர்த்தெழுதல், உள்ளத்தை உலுக்கிவிட்டது; மனுக்குலத்தை குலுக்கிவிட்டது.
🎉 மரணம், செத்தபின், பரமவாழ்வுக்கு, பரலோகக்கதவு திறந்தநாள் இன்று.
🎉 உயிர்த்தெழுதல் என்பது:
வருடந்தோறும் வாடிக்கையாகக் கொண்டாடும் கொண்டாட்டம் அல்ல. அனுதினமும் அனுபவிக்க வேண்டிய உன்னத ஜீவியம்.
🎉 இயேசுவின் உயிர்த்தெழுதலை, பெரியகல்லால் தடுக்கமுடியவில்லை. கல்லில் வைக்கப்பட்ட முத்திரையாலும் தடுக்க முடியவில்லை.
🎉 அபிஷேகம் பெற்றுக் கொண்ட நாம், இயேசுவைக் குறித்து, சாட்சி கொடுக்காவிட்டாலும் சாட்சியாய் வாழலாமே!
😇 இயேசு உயிர்த்தெழுந்தார்.
லூக்கா 24:6