பெண்களே!



அழகைப்பற்றி கனவு காணாதீர்கள். அது உங்கள் கடமையை பாழாக்கிவிடும். கடமையைப் பற்றி கனவு காணுங்கள், அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்.


குடும்ப உறவுகளைப் புரிந்து விட்டுக்கொடுப்போம்,விலைமதிப்பற்ற அன்பைப் பொழிந்து குற்றங்களை மன்னித்து மறப்போம்.


குடும்பத்தில் அமைதி காத்து பொறுமையைக் கடைப்பிடிப்போம். மனத்தாங்கல் வரும்போது மனம்திறந்து பேசி காரியத்தை கச்சிதமாய் வாய்க்கச் செய்வோம்


ஆத்துமாக்களுக்காக ஜெபிக்கத் தீர்மானித்து ஆண்டவரின் பாதம் அமர்வோம். பிறந்த வீட்டுப் பெருமையைப் பேசாது, புகுந்த வீட்டின் பெருமையை நிலை நாட்டுவோம்.


எஸ்தரைப் போல் தைரியமாய் நின்று, அன்னாளைப் போல் பண்பில் ஓங்கி, மரியாளைப்போல் தேவதிட்டத்திற்கு கீழ்ப்படிந்து, மாறாத நேசரிடம் வாழ்வை ஒப்படைப்போம்.