☘️☘️ சிந்தனைக்கு☘️☘️
🌍 தேவ வார்த்தையால் உணர்வடைந்தோர் உலகத்தை கலக்குவார்கள். உணர்வடையாதோர் உலகத்தோடு கலப்பார்கள்.
💯 பொய் ஆயிரம் மைல்கள் பயணித்த பின்னர் தான், சத்தியம் செருப்பு அணியவே துவங்கும்.
🪙 ஆசைப்பட்டது அற்ப வெள்ளிக்காசு, விலை பேசியது முப்பது வெள்ளிக்காசு, முற்றுப்புள்ளி வைத்தது விடிவெள்ளி இயேசு.
👍🏻 தேவ பிள்ளைகள், தேவைகளுக்காக தேவனைத் தேடாமல், தேவனைத் தேடுவது தேவையான ஒன்று என தேடுங்கள்.
🛣️ தெரியாத எதிர்காலத்தை தெரிந்த ஆண்டவரிடம் விட்டுவிடு. எந்த அவமானத்தையும் வலியாய் எடுத்துக்கொள்ளாதே வழியாய் எடுத்துக்கொள்.
🚫 பெற்ற அனுபவத்தால் பெருமைப்பட்டு பெற வேண்டிய அனுபவத்தை அழித்து விடாதே.
🥼 வார்த்தைக்கு மட்டுமே வல்லமை அல்ல, வஸ்திரத் தொங்கலுக்குமே வல்லமை தானே!
🙏🏻 நாம் ஜெபத்தை முக்கியப்படுத்தினால் தேவன் நம்மை முக்கியப்படுத்துவார்.