மான்
முன்பு எங்களைப் பார்ப்பது மிருகக்காட்சி சாலையில், தற்போது பார்ப்பது உங்கள் உள்ளங்கையில் (செல்போன்).
எங்களை நேசரோடு இணைத்து வர்ணிப்பது எவ்வளவு பெருமை தெரியுமா? - உன்னதபாட்டு 2:9
எங்களின் வேகம் வேதத்திலும், உலகளவிலும் எவ்வளவு பிரசித்தி பெற்றது தெரியுமா?
உங்களுக்கும் வேகம் தேவை தான்- எதில் வேகம் தேவை என்ற விவேகம் அவசியம் தேவை.
பணம், புகழ், பேர் சம்பாதிக்க வேகமாய் ஓடினாலும், உங்களின் வாஞ்சை, எண்ணம், செயலெல்லாம் ஆண்டவருக்காய் வேகமாய் செயல்படவேண்டும். வேகமாய் ஓடி ( நீதி 6:5ன்படி) சாத்தான் வலையில் விழுந்து விடாதபடி உங்களை தப்புவித்துக் கொள்ளுங்கள்.
சங் 42:1 மானானது நீரோடைகளை... என்றபடி தாவீது உங்களுக்கு முன்மாதிரியாய் இருந்தது போல நீங்களும் பிறருக்கு முன்மாதிரியாய் இருங்கள்.
உயரமான இடங்களில் நிற்பதும், நடப்பதும் எங்களுக்கு எளிதே. அதுபோல
சங் 18:33ல் கூறியபடி உங்களையும் உயரமான இடத்தில் கர்த்தர் நிறுத்துவார். அவருக்கு பிரியமான பிள்ளைகளாய் வாழும் போது மட்டுமே.
விடுதலை பெற்ற பெண்மானைப் போல நன்மையான, பயனுள்ள வசனங்களையே பிரசங்கியுங்கள். ஆதி49:21