"நீ","நீயாக இரு"

1. தங்கம், விலை அதிகம் தான்; தகரம் விலை மலிவு தான், ஆனால், தகரத்தால் செய்வதை தங்கம் கொண்டு செய்ய முடியாது. அதனால் தகரம் மட்டமில்லை, தங்கமும் உயர்ந்ததும் இல்லை. ஆகவே, "நீ நீயாக இரு".


2. குயில், மயில் போல் அழகில்லைதான். ஆனாலும் அழகிய குரலுக்கு சொந்தம் குயில் தான். ஆகவே, "நீ நீயாக இரு.


3. நாய்க்கு, சிங்கம் போல் வீரமில்லை தான்; ஆனாலும், நன்றி என்னவோ நாய்க்கு தான்; ஆகவே, "நீ நீயாக இரு".


4. பட்டு போல், பருத்தி இல்லை தான்; ஆனாலும் வெயிலுக்கு சுகம் என்னவோ பருத்தி தான்; ஆகவே, "நீ நீயாக இரு".


ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான "அற்புதம்" தான்.

எனவே, "நீ நீயாக இரு".


தேவன் படைத்தது உன்னை நீயாகத்தான். உன்னை நீயே உரசிப்பார்; உன்னை சரி செய்து கொண்டே வா. "நீ நீயாக இரு".


தேவ அன்பைக் காட்டு; அவர் போல் நட உலகம் ஒரு நாள் உன்னைப் போல் வாழ ஆசைப்படும் - "நீ நீயாக இரு".


உலகம் ஒரு நாள் உன்னைப் பாடமாக ஏற்கும் உன் வாழ்க்கையின் மூலம் பிறரை தேவன் பக்கமாக வழி நடத்து;

"நீ நீயாகவே இரு".


தேவ மகிமை உன்னில் வெளிப்படட்டும்.


"மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு... பிரகாசிக்கக்கடவது".

மத்தேயு 5:16