சகேயு-இயேசுவை பார்க்கும் முன், பார்த்த பின்..
உலகத்திற்குரியதை தேடினவன், பின் உன்னதருக்கானதை தேடினான். கரத்தில் வாங்கும்படி தேடினவன், பின் கரம் நீட்டி கொடுக்கும்படி மாறினான். அது யார்? சகேயு.
1. முன், பணம் சம்பாதிப்பது உயர் பதவி வகிப்பது தான் இலட்சியம். பின், இயேசுவை மரத்தில் ஏறியாவது பார்த்துவிட வேண்டும் என்பதே இலட்சியம்.
2. முன், உலக வங்கியில் பொக்கிஷத்தை சேர்ப்பது தான் இலட்சியம். பின், பரலோக வங்கியில் பொக்கிஷத்தை சேர்ப்பதுதான் இலட்சியம்.
3. முன், பணத்தை பெருக்குவது தான் இலட்சியம். பின், பணத்தை பகிர்ந்து கொடுப்பது தான் இலட்சியம்.
4. முன், ஐசுவரியவான் என்ற அந்தஸ்தை அடைவது தான் இலட்சியம். பின், ஆபிரகாமின் குமாரன் என்ற அந்தஸ்தை அடைவது தான் இலட்சியம்.
5. முன், உலக மதிப்பு, புகழ், மரியாதையை அடைவது தான் இலட்சியம். பின், விசுவாசம், தேவ பிள்ளை என்ற அந்தஸ்தை அடைவது தான் இலட்சியம்.
கடைசியாக, நாம் எப்படி? நம் தேடல் எப்படி? நம் இலட்சியம் என்ன? நாம் மாற வேண்டியது எதில்? நம்மில் சீர்படுத்தும் விஷயங்கள் எவை? என ஆராய்ந்து, புதுவருடத்தில் நுழைந்துள்ள நாம் புது மனிதர்களாக மாறி இயேசுவின் வருகைக்கு ஆயத்தப்படுவோமா!