எறும்பு-ஞானம்
ஞானத்திற்குஅடையாளம் அற்பமான ஜந்துவான "எறும்பு" என்பது நாம் அறிந்ததே!
1. எறும்பின் கஷ்ட நஷ்டங்களை எடுத்துச்சொல்ல "பிரபு இல்லை".
2. பணியை ஒழுங்கும் கிரமுமாகச் செய்ய, முன் நின்று நடத்த "தலைவன் இல்லை".
3. கடமையை கண்ணும் கருத்துமாய் கண்டித்து செய்ய "அதிகாரி இல்லை".
4. எறும்புக்கு காலத்தை கணித்து அறிய "காலண்டர் இல்லை".
ஆனாலும், காலத்தை பகுத்தறியும் "ஞானம்" இருக்கிறது. கோடை காலத்தை அறிந்து சுறுசுறுப்பாய் செயல்பட "ஞானம்" இருக்கிறது. மழைக்காலத்தில் ஆகாரத்தை சேர்த்து ஓய்வு எடுக்க "ஞானம்" இருக்கிறது.
ஐந்தறிவு உள்ள ஒரு சிறிய எறும்பு இப்படி எல்லாம் இருக்கும் போது நாம் எப்படி இருக்கிறோம்? நாம் செய்ய வேண்டியது என்ன? என சற்று சிந்தித்து நம்மை நாமே ஆராய்ந்து செயல்படுவோமா!
வசனம் கிடைக்காத, பஞ்ச காலம் வரவிருப்பதை எண்ணி, ஆண்டவரின் வருகை அதிசீக்கிரம் என்பதையும் எண்ணி சுவிசேஷத்தை அறிவிக்க சுறுசுறுப்பு உள்ளவர்களாய் ஆயத்த படுவோம்! ஆயத்தபடுத்துவோம்.
தன் வழியை சிந்தித்து கொள்வது விவேகியின் ஞானம் நீதிமொழிகள் 14:8