வெற்றி பெற நடைமுறைப்படுத்துபவை
1. எண்ணங்கள் எப்படியோ அப்படித்தான் வாழ்க்கையும் அமையும் சிறந்ததையே எண்ணுங்கள்.
2 ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒரு முறை முடிவெடுங்கள்.
3.யார் சொல்வது சரி என்று பார்க்காதீர்கள். எது சரி என்று பாருங்கள்.
4. தனியாக இருக்கும் போது சிந்தனையிலும் கூட்டத்தில் இருக்கும்போது பேசும் வார்த்தையிலும் கவனமாக இருங்கள்.
5. வாழ்க்கையில் தோற்பவர் இரண்டு பேர்: யார் பேச்சையும் கேட்காதவர்
எல்லோருடைய பேச்சையும் கேட்பவர்.
6. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்.
7. ஒரு கதவு மூடினால், மற்றொரு கதவு திறக்கும். மூடிய கதவையே பார்ப்பவர்கள், திறக்கும் கதவை தவற விடுகிறார்கள்.
8. நாளை என்பது மிக மிக தாமதமாகும், இன்றே, இப்பொழுதே செயலில் இறங்கி விடுங்கள்.
9. நல்ல சிந்தனைகளை, நான்கு திசைகளிலும் விதைப்போம்.
என் சிந்தனைகளை அறிந்து கொள்ளும். சங்கீதம் 139:23