🎄🎄 இயேசு கிறிஸ்துவின் பிறப்பு🎄🎄


🎄தொழுவத்தில் பிறந்தவருக்கு கலர்கலராய் கண்ணாடி நட்சத்திரங்கள், அழகழகாய் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்மஸ் மரங்கள் அத்தனையும் கனி இல்லாத காகித மரங்கள்.


🎄கிறிஸ்து பிறந்ததின் நோக்கம் நமக்கு தெரியாதது அல்ல; கிறிஸ்து வாழ்ந்ததின் அர்த்தம் நமக்கு புரியாததல்ல; கிறிஸ்து மரித்து உயிர்த்தெழுந்ததின் இலக்கும் நமக்கு புதிர் அல்ல; ஏன் எல்லாமே தேவ சித்தப்படி நிறைவேறியது தான்!


🎄இருப்பினும் கிறிஸ்து பிறப்பின் நாளை நாம் எப்படி கொண்டாடுகிறோம்?


🎄அலங்காரத்துடன் ஆலயம் சென்று; ஆண்டவரை ஆராதித்து விட்டு; வேகவேகமாய் வீடு வந்து, அவசர அவசரமாய் கேக் வெட்டி; குதுகலமாய் கொண்டாடி விட்டு, Beach, Mall என உலா வந்து மகிழ்ச்சிக் கடலில் திளைக்கிறோமே! இதுவா கிறிஸ்மஸ் கொண்டாட்டம்!


🎄 இயேசுவை அறியாத மக்கள் லட்சம் பேர் இருக்க, நாமோ லட்சியமே ஏதுமின்றி கொண்டாடுகிறோமே!


🎄இனியாவது,

ஒருவரையாவது கிறிஸ்துவண்டை வழிநடத்தி, திருமுழுக்கு எடுக்க வைத்து, இரட்சிப்பைப் பற்றி எடுத்துரைத்து, அதன்பின் கிறிஸ்மஸ் கொண்டாடுவோம், இவ்வாண்டு கிறிஸ்மஸ் கீர்த்தி பெறுவோம். கிறிஸ்துவும் மகிழ்ச்சி கொள்வார்.


கர்த்தராகிய இயேசுகிறிஸ்து...... லூக்கா 2:11


🎄 அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் தின நல்வாழ்த்துக்கள்.