⛪ சபை! சபை!! சபையே!!!⛪




⛪ சபை என்பது: ஆராதனைக்குரிய இடம்; ஆவியானவர் வாசம் செய்யும் இடம்.


ஆவியானவரை செயல்பட விடுங்கள்; ஏனெனில், இது தேவனுடைய வாசஸ்தலம்.


சொந்த பேச்சைப் பேசாதிருங்கள்; ஏனெனில், இது தேவ மகிமை நிறைந்த இடம்.


ஒழுங்குகளை மீறாதீர்கள்; ஏனெனில்- இது பரிசுத்தம் நிறைந்த இடம். 

துணிகரம் கொள்ளாதீர்கள்; ஏனெனில்-இது ஆவியானவர் அசைவாடுமிடம். 

சுயசித்தத்தை திணிக்காதீர்கள்; ஏனெனில்-சபை, தேவன் தம் சித்தத்தை நிறைவேற்றுகிற இடம்.


நாம் சபையோடு ஐக்கியப்படுவதே தேவனின் பிரதான நோக்கம். சபைக்கும், நமக்கும் உள்ளதொடர்பு தான், தேவன், நமக்கு தரும் ஆசீர்வாதம். தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது.


😇 "நீங்களே, அந்த ஆலயம்" 

I கொரிந்தியர் 3:17