அழகான வரிகள்
🍁 அறிமுகம் இல்லாதவர்களின் பார்வையில் நாம் எல்லோரும் சாதாரணமானவர்கள்.
🍁பொறாமைக்காரரின் பார்வையில் நாம் அனைவரும் அகந்தை உள்ளவர்கள்.
🍁 நம்மை புரிந்து கொண்டவர் பார்வையில் நாம் அற்புதமானவர்கள்.
🍁 நேசிப்போரின் பார்வையில் நாம் தனிச்சிறப்பானவர்கள்.
🍁 சுயநலவாதிகளின் பார்வையில் நாம் ஒழிக்கப்பட வேண்டியவர்கள்.
🍁சந்தர்ப்பவாதிகளின் பார்வையில் நாம் ஏமாளிகள்.
🍁 எதையும் புரிந்து கொள்ளாதவர்கள் பார்வையில் நாம் குழப்பவாதிகள்.
🍁 கோழைகளின் பார்வையில் நாம் அவசரக் குடுக்கைகள்.
🍁 மனிதர்களை திருப்திப்படுத்துதல் என்பது நாம் எட்ட முடியாது இலக்கு.
🍁 எட்ட முடியாததை விட்டு விடுங்கள். அடைய வேண்டியதை விட்டு விடாதீர்கள்.
🍁 எப்போதும் நேர்மையும், தைரியமும் உங்கள் சொத்தாக இருக்கட்டும்.
ஆகவே,
🍁 மிகுந்த பலனுக்கேதுவான உங்கள் தைரியத்தை விட்டு விடாதிருங்கள்.
எபிரெயர் 10:35