விடுகதை - பெண்கள்



💁🏻‍♀️ முன்னே உடல் ஓட; பின்னே தலை திரும்ப; மேலே ஆவி பறக்க; அங்கே தானே நிற்க; அவள் யார்? லோத்தின் மனைவி.


💁🏻‍♀️ Beauty Parlour சென்றாலும்; உயர்ந்த ஆடை அணிந்தாலும்; நகை போட்டாலும்; பக்தி, புத்தி, கிரியை, அடக்கம், அமைதி தேவை. யாருக்கு? ஸ்திரீக்கு(I தீமோத்தேயு 2:9-11)


💁🏻‍♀️ எனது பெயரின் முதல் எழுத்து உயிர் எழுத்து; மறுபகுதியிலே பயணம் செய்யலாம்; பள்ளத்தாக்கும் என்னில் உண்டு. அது எது? ஆகார் பள்ளத்தாக்கு (ஆதியாகமம் 16:1, கலாத்தியர் 4: 25)


💁🏻‍♀️ படித்த படிப்பு ஆர்க்கிடெக்ட் அல்ல; கையில் பிடித்தது செங்கல்லும் அல்ல;கொத்தனார் வேலை செய்ததும் இல்ல;ஆனால் தன் வீட்டை தானே கட்டுகிறாள் அவள் யார்? புத்தியுள்ள ஸ்திரீ (நீதிமொழிகள் 14:1)


💁🏻‍♀️ இவளுக்கு பெயர் இரண்டு உண்டு; இகத்தில் வாழ்வும் இரண்டு உண்டு; நண்பர்களின் வட்டம் உடனுண்டு;அவள் யார்? தொற்காள் (அப்போஸ்தலர் 9:36 - 40).


💁🏻‍♀️ ஓடுமீன் ஓட -உறுமீன் வரும் அளவும் காத்திருக்கும் கொக்கை போல தேவையானதை பெற்றுக்கொள்ள காலடியில் காத்திருந்தாள். அவள் யார்? மரியாள் (லூக்கா 10:39 - 42).


💁🏻‍♀️ கல்லைக் கண்டால் நாயை காணோம்; நாயை கண்டால் கல்லை காணோம்; நாய்கள் ஒன்று சேரவே இவள் உடலையே காணோமே? இவள் யார்? யேசபேல் (II இராஜாக்கள் 9; 30 - 37)


💁🏻‍♀️ இரண்டெழுத்துப் பெண் மூன்றெழுத்து ஆணை மணந்து ஓபேத்தை பெற்றாள்.அவள் யார்? ரூத் (4:13 - 17)