இயன்றதை செய்திடு



அன்பின் அடையாளம் அவள்.

ஆதரவின் ஊன்றுகோல் அவள்.

இரக்கத்தின் இலக்கணம் அவள்.

ஈகையின் ஊற்று அவள்.

உள்ளம் குளிர உதவியவள் அவள். ஊருக்கெல்லாம் உழைப்பவள் அவள்.


யோப்பா வாசி; இயேசுவின் சீஷி அவள்.

தொற்காள் அவள்- தபீத்தாளும் அவளே!


மாதிரி பெண்ணாய் மண்ணில் வாழ்ந்த அவளை, மரணம் கொள்ளையாடியது ஒருநாள். விதவைகள் விடைகொடுக்க மனதில்லாது விம்மி அழுதனர் அன்பு தோழிக்காக.

அழைத்தனர் பேதுருவை,

பிரேதத்தின் முன் மண்டியிட்டார்,

பிராத்தனை ஏறெடுத்தார், தபீத்தாளே எழுந்திரு என்றார். தொற்காள் உயிரடைந்தாள் உடனே!


அழுகையின் நடுவே- அதிசயம் அரங்கேறியது

விதவைகள் நடுவே - வினோதம் மலர்ந்தது

இயேசுவின் சீஷி- இன்னுயிர் திரும்பினாள்.


ஏன்?


இல்லாதோருக்கு இயன்றதை செய்து இயேசுவின் அன்பை அறிவிக்க!


நாமும் நம்மால் இயன்றதை செய்வோமா!!