சுதந்திரமும், விடுதலையும்
ஆங்கிலேயரின் அதிகாரத்தை விலக்கி விட்டு, அஹிம்சை முறையில் பெற்ற சுதந்திரத்தை காக்க வேண்டியது நம் கடமை அல்லவா?
கத்தியின்றி, இரத்தமின்றி யுத்தம் செய்த மண்ணில் (மணிப்பூர்) குரல்வளை அறுத்து இரத்தம் சிந்துவது தான் அஹிம்சையா?
நன்முறையில் கிடைத்த விடுதலை வன்முறை கும்பலுக்கு இரையாவது நியாயமா?
மனிதநேயம் மரித்துப் போனதா? (or) நம் ஜெபம் பரலோகம் செல்லாமல் பாதியில் நின்று விட்டதா? (இல்லை) நம் அக்கிரமத்தால் நம் அழுகுரலுக்கு ஆண்டவர் செவிசாய்க்கவில்லையா?
அன்பு தேவ பிள்ளைகளே!
ஒற்றை சக்கரத்தால் வண்டியை ஓட்ட முடியாது. ஒற்றுமை நெம்பு கோலால் உலகத்தையே புரட்டலாமல்லவா?
கர்த்தர் : எகிப்தில் இருந்து சுதந்திரத்தை பெற மோசேயை அனுப்பினார்; மீதியானியரிடத்திலிருந்து சுதந்திரத்தை பெற கிதியோனை அனுப்பினார்; கானானியரிடமிருந்து சுதந்திரத்தைப் பெற தெபோராளை அனுப்பினார்; அம்மோனியரிடமிருந்து விடுதலை பெற யெப்தாவை அனுப்பினார்;
அதுப்போல, இன்னும் நம் இந்தியா பாவ, சாப, இச்சைகளிலிருந்து விடுதலை பெற நம்மைத்தான் கர்த்தர் அழைக்கிறார்.
அதனால் நாம் அனைவருமே ஆயத்தமாவோம்! என்ன? Ready தானே!