இரட்டை புதிர்கள்
💥மகன்கள் மடிந்த போதும் மௌனம் காத்தவன்- ஆரோன்.
மேலாடை போன போதும் மானம் காத்தவன்- யோசேப்பு.
💥 மாடியில் உலாவி விழுந்து போனவன் இவன் - தாவீது.
மாடியிலிருந்து விழுந்து போனவன் - ஐத்திகு.
💥 வனாந்திரத்தில் வசைபாடி சாபமானவள் - மிரியாம்.
மலைப்பாதையில் புகழ்பாடி மனைவியானவள் - அபிகாயில்.
💥 குள்ளனாயிருந்தாலும் நல்லவனாய் மாறினான் - சகேயு .
கூடவே இருந்தும் கள்ளனாய் மாறினான் - யூதாஸ் காரியோத்.
💥 யுத்தகளம் சென்று பாடியவள் - தெபோராள்.
சுத்தியலைப் பிடித்து யுத்தத்தை முடித்தவள் - யாகேல்.
💥 தட்டிலே தலைவாங்கி தரங்கெட்ட வேசி - ஏரோதியாள்.
தப்பிக்க வழி காட்டி தலை காத்த வேசி - ராகாப்.
💥 தூதனைக் கண்டு பேசாத வாய் பேசியது - பிலேயாமின் கழுதை.
தூதன் உரைத்ததை நம்பாததால் பேசிய வாய் ஊமை ஆனது - சகரியா.
💥 எல்லாம் கூடும் யாராலே? தேவனாலே!
எல்லாம் கூடும் யாருக்கு ? விசுவாசிகளுக்கு!