உன்னால்! உன்னால்! உன்னால் தான்!!
உன்னால் சிரித்தவர் ஆயிரம்பேர் இருக்கலாம்;
ஆனால், அழுதவர் ஒருவரும் இருக்கக் கூடாது.
உன்னால் வாழ்ந்தவர் அநேகர் இருக்கலாம்;
ஆனால், வீழ்ந்தவர் யாரும் இருக்கக்கூடாது.
உன்னால் பசியாறியவர் பலபேர் இருக்கலாம்;
ஆனால், பட்டினியாய் ஒருவரும் இருக்கக் கூடாது.
உன்னால் கர்த்தரின் மகிமையை பெற்றவர் பலர் இருக்கலாம்;
ஆனால், இழந்தவர்கள் ஒருவரும் இருக்கக் கூடாது.
ஆகவே,
இரட்சிக்கப்பட்ட கர்த்தரின் பிள்ளைகளாகிய நாம் பிறருக்கு பிரயோஜனமாக இருக்க வேண்டுமே தவிர, பிராப்ளமாய்(Problem) இருக்கக் கூடாது.
நம் வாழ்வின் இறுதி அடையாளங்கள் இவையே!
கர்த்தர் என் வெளிச்சமும்.... சங்கீதம் 27:1