வாலிபனே!👱🏻
👀 பார்வை பாவமாகிடாமல் பாதுகாத்திடு👀
👁️ "கண் சரீரத்தின் விளக்கு" என்பதை அனைவரும் அறிவோம்.
📱கேட்கும் போதும், பேசும் போதும் கவனமாக இருந்தாலும், கையில் இருக்கும் கைபேசியை பார்ப்பதால் அது நம்மை திசை திருப்ப முயற்சிக்கிறது உண்மை தானே!
🍎 ஏவாள்: முதலில் கனியைப் பார்த்தாள், பின் புசித்தாள், கடைசியில் கொடுத்தாள். பார்த்தவுடனே மனதிற்குள் பாவம் நுழைந்து விட்டதே!
👁️ தாவீது: பத்சேபாளை பார்த்தான், தவறு செய்தான். பார்த்தவுடனே பாவ எண்ணம் நுழைந்து விட்டதே!
👱🏻 ஆகவே, வாலிபர்களே!
👀 பார்க்கும் பார்வையில் கவனமாயிருங்கள்.
👀 பார்வையால் வரும் பாவத்தை தடுத்து விடுங்கள்.
👀 பார்வையை வேறு பக்கம் திருப்பி எச்சரிக்கையாய் இருங்கள்.
👀 கண்களை கர்த்தர் பக்கம் பதித்து விடுங்கள்.
🚨 பார்வை பாவத்தில் மூழ்கடித்து விடும். முதலில் பார்வை, அடுத்து ஆசை, பின் துணிகரம் கடைசியில் பாவம். கைபேசியை உபயோகிப்பதில் கவனம் அதிகம் தேவை.
பாவம் பூரணமாகும் போது மரணம்
(யாக்கோபு 1:15)
"God knows Everything."