கணவர்களின் கனிவான கவனத்திற்கு


கணவர்களின் கனிவான கவனத்திற்கு...

மனைவி அமைவதெல்லாம்...


1. "மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்" என்பது உலகக்கூற்று. ஆனாலும் கணவரே!

திருமணத்திற்கு முன் நீங்கள் ஜெபித்த ஜெபத்தின் பலனே உங்கள் அன்பு மனைவி.


2.நீங்கள் ஜெபிப்பதற்கேற்ப அவள்: மாறி இருப்பாள்

கிரீடமாய் விளங்குவாள் எல்லாவற்றிலும் கீழ்ப்படிவாள்

புகுந்த வீட்டிற்கு பெருமை சேர்ப்பாள் குறைகளைக் கண்டு குன்றிப் போக மாட்டாள்.


3. ஆண் என்ற ஆணவத்தை அகற்றிவிட்டு, அன்பு மனைவியை அனுசரித்துப் போவதுதான் அழகு என்பது, உங்களுக்கு தெரியாததல்ல! புரியாததல்ல!!


4. எல்லாவற்றுக்கும் மேலாக பெற்ற தந்தையின் முதல் எழுத்தைக் கூட துறந்தாளே உங்களுக்காக ஆகவே விலா எலும்பை - எப்பொழுதுமே விட்டுக் கொடுத்துவிடாதீர்கள்!


5. உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள் . எபேசி 5:25