ஜென்ம சுபாவம்-கிருபை
ஜென்ம சுபாவம்-தந்திரமுள்ளது.
கிருபை-கபடமில்லாமல் தேவனுக்காக எதையும் செய்யும்.
ஜென்ம சுபாவம் - தாழ்ந்து போகாது
கிருபை- தாழ்மையானது.
ஜென்ம சுபாவம்-சோம்பலாயிருக்கும்.
கிருபை-சுறுசுறுப்பாய் இருக்கும்.
ஜென்ம சுபாவம்-பிறரை அற்பமாய் எண்ணும்.
கிருபை-பிறருக்கு மதிப்பு கொடுக்கும்.
ஜென்ம சுபாவம்-அநித்தியமானதை நாடும்.
கிருபை- நித்தியத்தையே முக்கியப்படுத்தும்.
ஜென்ம சுபாவம்- வெளிப்படையான ஆறுதலைத்தேடும்.
கிருபை -தேவனின் ஆறுதலை மட்டுமே தேடும்.
ஜென்ம சுபாவம்- கஷ்டங்களை சகிக்காது.
கிருபை-கஷ்டங்களை பொறுமையாய் சகிக்கும்.
ஜென்ம சுபாவத்திலிருந்து:
மாறுவது கடினம்;
வெளிவருவது கடினம்;
விடுதலை பெறுவது கடினம்.
கிருபை: ஒரு அற்புதமான ஒளி, தேவனுடைய விசேஷித்த உன்னத ஈவு,
தெரிந்து கொள்ளபட்டவர்களின் சரியான அடையாளம்,
நித்திய இரட்சிப்பிற்கு அத்தாட்சி.
தேவனே! உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது.
சங்கீதம் 36:7