பெண்களுக்கான சில ஆலோசனைகள்
பெண்கள்:
அதிகாலையில் எழுந்து ஆண்டவர் பாதம் அமர்கிறவர்களாய்,
மாயமற்ற விசுவாசம் உள்ளவர்களாய்,
எல்லாக் காரியத்திலும் கணவருக்கு கீழ்ப்படிகிறவர்களாய்,
தருமம் மிகுதியாகச் செய்கிறவர்களாய்,
அன்பான உபசரிப்பில் சிறந்தவர்களாய்
கனிதரும் திராட்சைக் கொடியாகவும் இருக்க வேண்டும்.
மேலும் பெண்களே!
பேச்சைக்குறையுங்கள் - வேலையைக் கூட்டுங்கள்.
உங்கள் மதிப்பை சொல்லால் அல்ல- செயலில் காட்டுங்கள்.
எல்லாவற்றையும் இழந்தாலும் எதிர்காலத்தை இன்னும் இழக்கவில்லை என தேவனுக்காய் ஓடுங்கள்.
சோதனைசூறாவளி போல் சுழன்று அடித்தாலும், சோர்ந்து போகாதீர்கள்.
வீண் ஆடம்பரத்தை வெறுத்து, சிக்கனமாய் செலவு செய்து, குடும்பத்தை கட்டி எழுப்பும் குணவதிகளாய் திகழுங்கள்.
நாம் கர்த்தரை உண்மையாய்த் தேடும் போது, நம் கண்ணீர் மறைய, காலம் தாமதிக்காது என விசுவாசியுங்கள்.