❤️❤️❤️ அன்பு❤️❤️❤️
❤️ முழு உலகத்தையும் இயக்கும் அச்சாணி அன்பு.
❤️ எவராலும் மாற்ற முடியாதது; எவராலும் பிரிக்க முடியாதது. எச்சூழலிலும் தணிக்க முடியாதது; எக்காரணத்தாலும், அழிக்க முடியாதது.
❤️ மனதார மன்னிக்கும்; மனமுவந்து ஏற்றுக்கொள்ளும்; மனப்பூர்வமாக ஆசீர்வதிக்கும்; மகிழ்ச்சி மழையில் நனைக்கும்.
❤️ அறிவுக்கு எட்டாதது; அளக்கவே முடியாதது;
சொல்லில் அடங்காதது; ஒப்பிடவே முடியாதது;
எல்லாருக்கும் உரியது; என்றென்றும் மாறாதது.
❤️ அன்பின் எதிர்பார்ப்புகள்:- பணமோ, பொருளோ இல்லை. பாசத்துடன் ஒரு பார்வை; அக்கறையுடன் ஒரு வார்த்தை.
❤️ மனதுக்குள் மகிழ்ச்சியை தருவது; முகமெல்லாம் மலர்ச்சியை கொடுப்பது;
எதிரியையும் ஏற்றுக்கொள்வது; இதயத்திற்கு இன்பம்சூட்டுவது அன்பே.
❤️ அபிஷேகம் இருந்தால் போதாது; அன்பும் வேண்டும் .
❤️ எங்கும் கிடைக்காத; எவரிடமும் கிடைக்காத; எப்பொழுதும் கிடைத்திடும்; எவருக்கும் கிடைத்திடும் அன்பு, அது இரட்சகராம் இயேசு சிலுவையில் காட்டின அன்பு.
❤️ அன்பு சகலத்தையும் தாங்கும்
(I கொரி 13:7)