நமது கரமும், கர்த்தரின் கரமும்
அடிக்கிற கைதான் அணைக்கும் என்பது ஆன்றோர் வாக்கு.
வலதுகை மிகமிக முக்கியமானது.
அழியாத கல்விச்செல்வத்திற்கு அடிக்கல் நாட்டுவது வலதுகை.
இல்வாழ்க்கையில் இருவரையும் இணைக்கும் பாலம் வலதுகை.
வயதானவர்களுக்கு கரம் நீட்டி வழிகாட்டுவது வலதுகை.
ஒரு செயலைச் செய்ய முதலில் செயல்படுவது வலதுகை.
துன்ப நேரத்தில் தைரியம் சொல்லி தட்டிக்கொடுப்பது வலதுகை.
பாராட்டும் நேரத்தில் கைக்குலுக்கி பரவசப்படுத்துவது வலதுகை.
முதலில் அடிக்க ஓங்குவதும் வலது கையே ! அதே நேரம் அரவணைப்பதும் கூட வலதுகைதானே!
எல்லாம் சரியே! ஆனாலும் ஆண்டவரின் கரம் நம்மை...
அணைக்கும்-ஆறுதல் படுத்தும்.
தாங்கும்-தைரியப்படுத்தும்
தேற்றும்-தூக்கிநிறுத்தும்
விடுவிக்கும்-பாதுகாக்கும்.
அவர் வலதுகை என்னை அணைக்கும். உன்னதப்பாட்டு 8:3