புறாவின் செய்தி



1. முன் நாட்களில் சமாதானத்தூது அனுப்ப காரணமாயிருந்தது நாங்களே!


2. இந்நாட்களில் சமாதானத்துக்கு அடையாளம் நாங்களே!


3. பேழைக்கு வெளியே உள்ள நிலையை அறிய பயன்பட்டது நாங்களே!


4. தேவனுக்கு பலிசெலுத்த தேர்ந்தெடுக்கப்பட்டது நாங்களே !


5. படைத்தவர் பார்வையில் விசேஷமானவர்களும் நாங்களே!


6. இயேசு பிறந்ததும் பிரமாணத்தின்படி தேவைப்பட்டதும் நாங்களே!


7. மனிதர்களுக்கு முன்மாதிரியாக சுட்டிக்காட்டப்பட்ட பாத்திரம் நாங்களே!


8. கபடற்றவர்கள் என கர்த்தரால் புகழப்பட்டவர்களும் நாங்களே!


9. தகன பலியிட எடுத்துச் செல்லப்பட்டதும் நாங்களே !


ஆனாலும்!


10. மனிதர்களாகிய உங்களை ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று ஆண்டவர் அதிகம் விரும்புகிறார். அவர் விருப்பத்தை நிறைவேற்ற ஆயத்தபடுங்கள்.