ஒரு தாயின் பொறுப்பு
குடும்பத்தில் தாயின் பொறுப்பு தான் அதிகம் என்பதை அனைவரும் அறிவோம். ஒரு தாய் ஆத்துமாவை வடிவமைக்கும் அற்புத சிற்பி.
கல்லில் சிலை வடிப்பவன் சிற்பி- ஆனால் எதிர்கால சந்ததியையே உருவாக்கும் தாய் தான் அதிசய சிற்பி.
ஜெபிக்கும் தாயைப் பெற்ற எவரும் ஏழையல்ல. ஒரு மாபெரும் ஸ்தாபனத்தை கட்டி எழுப்புவதைக் காட்டிலும் அழகிய கிறிஸ்தவ குடும்பத்தை கட்டி எழுப்புவது கடினமே!
சூசன்னா வெஸ்லி தான் பெற்ற 19 பிள்ளைகளை மட்டும் உருவாக்கவில்லை, ஜெபத்தால், பல்லாயிரக்கணக்கான மக்களையும் உருவாக்கினார் என்று சொன்னால் மிகையாகாது. தாயின் சாட்சி முதலில் குடும்பத்தில் இருக்க வேண்டும்.
ஜெப வீராங்கனைகள் உத்தம ஊழியர்களை உருவாக்குகிறார்கள். ஒரு தாய் ஆயிரம் ஆசிரியர்களைப் பார்க்கிலும் சிறந்தவள்.
பிள்ளைகளுக்கு Role Model முதலில் தாய் தான். ஆகவே அருமையான தாய்க்குலமே! உங்களுடைய பொறுப்பை உணர்ந்து கொண்டீர்களா? அதை நிறைவேற்றுகிறீர்களா? நிறைவேற்ற முயற்சிக்கிறீர்களா?
உத்தமர்களை உருவாக்கும் பணி உங்களுடையதே! அதற்கேற்ற ஞானத்தையும், கிருபையையும் கர்த்தர் தந்தருள்வாராக!
கர்த்தருக்கு பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள். நீதி 31:30