இன்றைய சிந்தனைத் துளிகள்




1. பென்சில் பின்னாடி இருக்கிற ரப்பர் போல பல

பிரச்சினைகளுக்கு தீர்வு அதிலே அடங்கி இருக்கிறது.

2. யாரையும் அற்பமாக நினைக்காதீர்கள். சிறு தீக்குச்சியின் வலிமை பெரும் இருட்டையே அகற்றி விடுகிறது.


3. அன்பின் எதிர்பார்ப்பு பணமோ, பொருளோ இல்லை. பாசத்துடன் ஒரு பார்வை,அக்கறையுடன் ஒரு வார்த்தை.


4. விட்டுக்கொடுத்து போகிற மனம் இருந்தால் விட்டுவிட்டு போகிற எண்ணம் எவருக்கும் எழாது.


5. உங்களுடைய முதல் வெற்றி உங்களை நீங்கள் ரசிப்பது, மதிப்பது உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை கொள்வது.


6. புதைக்கப்படவில்லை விதைக்கப்படுகிறோம் என்று உணர்ந்த விதை இருளுக்கு அஞ்சாது. ஒதுக்கப்படவில்லை செதுக்கப்படுகிறோம் என்று உணர்ந்த மனம் தோல்விக்கு அஞ்சாது.


7. போட்டிபோட்டு வாழலாம் - ஆனால் பொறாமை கொண்டு வாழ்ந்துவிடாதே அது உன் வாழ்க்கையின் சாபமாகிவிடும்.