✌🏻✌🏻 வெற்றியை நோக்கி:✌🏻✌🏻
🚫 பயப்படாதிருங்கள் (ஏசாயா 41:10)
பயம் நம்மை செயல்பட விடாது. தேவன் மேல் நம்பிக்கை, விசுவாசம் வைக்கும் போது நிச்சயம் வெற்றியே!
👍🏻 தீர்மானம் எடுங்கள் (தானியேல் 1:8)
தீர்மானம் நம்மை தைரியப்படுத்தும். எது முக்கியம்? எதை படிக்க வேண்டும்? என தீர்மானித்து செயல்பட வேண்டும்.
💯 உண்மையாய் இருங்கள் (தானியேல் 6:4)
படிப்பில் உண்மை மிக மிக முக்கியம். கர்த்தர் பார்க்கிறார் என்பதை எண்ணி சிந்தையில் கூட தவற வேண்டாம்.
🛐 இணைந்து ஜெபியுங்கள் (தானியேல் 2:17)
ஆவிக்குரிய நண்பர்களோடு ஜெபித்து, படியுங்கள். ஒரு பறவை மரத்தின் கிளையில் அமரும் போது அது நம்புவது கிளைகளை அல்ல சிறகுகளையே!
அதுப்போல கர்த்தரை நம்பும் போது, அவர் தரும் ஞானம், ஞாபக சக்தி வெற்றி சிறக்கப் பண்ணும்!!