🙏🏻 நன்றி சொல்வோம்-வாங்க:🙏🏻
🙏🏻 2024-ம் ஆண்டு முழுவதும் தேவன் செய்த நன்மைகள் ஒன்றா? இரண்டா? அவைகள் எண்ணிக்கைக்குள் அடங்க முடியாதது; வார்த்தைகளால் விவரிக்க முடியாதது; அளந்து சொல்ல முடியாதது.
🙏🏻 தேவன் நமக்குச் செய்த தயவு, இரக்கம், அற்புதம், நல்லசுகம், பெலன் இவைகளை எண்ணி, எண்ணி துதிப்போம்.
இது மட்டுமா!
🙏🏻மன வேதனையின் போது சமாதானம் தந்து, ஆதரவற்ற நிலையில் நம்மை ஆதரித்து, ஆபத்தான நேரத்தில் கைகொடுத்து உதவி, தனிமையில் தவிக்கும் போது தாங்கி வழி நடத்தி, ஆவியிலும், சரீரத்திலும் பெலன் தந்து, ஜீவனைக் கூட்டிக் கொடுத்ததை எண்ணி உள்ளம் பொங்க, குடும்பமாய், சபையாய் இணைந்து நன்றிகளை ஏறெடுப்போமா!
🙏🏻 அனைவருக்கும் அன்பின் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
😇...வருஷத்தின் துவக்கமுதல் வருஷத்தின் முடிவு மட்டும்... கர்த்தரின் கண்கள் அதின் மேல்... உபாகமம் 11:12