கழுதையின் தாடை எலும்பு



1. 1000 பேர் கொன்று குவிக்கப்பட்டது

கழுதையின் தாடை எலும்பினால் தானே!


2. ஆரவாரம் பண்ணிய எதிரிகள் அடங்கும்படி அற்புதமாய் பயன்பட்டது தாடை எலும்பு தானே!


3. கட்டுகள் அறுந்து, அதே கைகளில் எதிரியை வீழ்த்தும் ஆயுதமாக பயன்பட்டது தாடை எலும்பு தானே!


4. பட்டயத்தை வைத்து அல்ல; வெற்றி பெற காரணம், அற்பமாய் கிடந்த பச்சை தாடை எலும்பு தானே!


5.பயனற்றதாய் கிடந்ததை வைத்து பயங்கரமான காரியம் நடப்பிக்கப்பட்டது தாடை எலும்பினால் தானே!


6. அரிய ஆயுதமல்ல; ஆனால் குவியல், குவியலாய் கொன்று குவிக்கப்பட்டது தாடை எலும்பினால் தானே!


7 படையாய் அல்ல; தனியனாய்

தரையில் கிடந்து சாதனை படைத்தது

தாடை எலும்பு தானே!


மேன்மையானவைகளை வைத்து அல்ல; மதிப்பற்றவைகளை வைத்தும் தேவனால் சாதிக்கமுடியும் தானே!