சிந்தனைக்கு

1. எல்லாம் என் திறமை என்றால் பெருமை

எல்லாம் அவர் கிருபை என்றால் தாழ்மை.

2. மனிதன் Best ஆனதை தெரிந்தெடுத்த போது

தேவன் worst ஆன என்னைத் தெரிந்தெடுத்தார்.


3. யாரோ ஒருவரின் அழைப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறீர்களே!

உங்களைப் பெயர் சொல்லி அழைத்தாரே அவருக்கு என்ன பதில்?


4. மீனுக்கு பிடித்த உணவையே சாத்தான் தன் தூண்டிலில் வைப்பான்.


5.தனிமையில் இருப்பவனை பைத்தியம் என்று சொன்ன உலகம் இன்று தனிமையில் இருப்பதே வைத்தியம் என்கிறது.


6 சுவிசேஷம் என்பது சுத்தியலால் கல்லை உடைப்பது அல்ல; உளியால் சிலையை உருவாக்குவது.


7. அதிகம் படித்தோர் பலர் தோற்றுப் போனதுண்டு- ஆனால் ஆண்டவரை உறுதியாய் பிடித்தோர் என்றுமே தோற்றுப் போனதில்லை.


8. பறவைகளின் நிம்மதியைக் கெடுக்க ஒரு கல் போதும்.

மனிதர்களின் நிம்மதியைக் கெடுக்க ஒரு வார்த்தை போதும்.


9. அலட்சியம் என்பது எத்தனை பெரிய தவறு என்று இழப்பு ஏற்படும் வரை தெரிவதில்லை.


10‌. தோல்வி நிச்சயம் எனத் தெரிந்தும் இவ்வளவு அதிகமாய் சத்துரு போராடும் போது, வெற்றி நிச்சயம் எனத் தெரிந்தும் தேவ பிள்ளைகள் ஏன் சோர்ந்து போக வேண்டும்?