ஆசிரியருக்கு மாணவனின் அன்புக் கடிதம்:💌💌💌



📚 ஐயா! நீங்கள், 

இயற்பியல் போதித்ததை விட, இறையியல் போதித்தது அதிகம்; அது இறைமகன் இயேசுவை எனக்கு காட்டியது.


👨🏻‍🏫 ஆசிரியராகப் பதவியேற்றாலும், ஆயராக அல்லவா பணியாற்றினீர்கள்.


💸 ஊதியத்திற்காக அல்ல, ஊழியத்திற்காக அல்லவா பள்ளிக்கு வந்தீர்கள்.


🎞️ படம் பார்க்க போன பரதேசிக்கும் அல்லவா பாடம் நடத்தினீர்கள்.


🫏 கட்டவிழ்க்கப்பட்ட இந்த கழுதைக்கு புத்தகப்பை சுமக்கும் போதே சிலுவை சுமக்க சொல்லித் தந்தீர்களே!


🙏🏻 என் நினைவில் எத்தனையோ செயல்கள் அழிக்கப்பட்டாலும்; நீங்கள் போதித்த உபதேசங்கள் கல்வெட்டாக எழுதப்பட்டு விட்டன.


😇 இன்று நான் ஒரு ஊழியனாய் மிளிர்வதற்குக் காரணம், கர்த்தரின் கிருபை, தங்களின் உபதேசம் என்பது முற்றிலும் உண்மையே!


சிலுவை பற்றிய உபதேசம்.....தேவ பெலனாய் இருக்கிறது. 

I கொரிந்தியர் 1:18