பெண்கள்-2

பெண்களை பற்றிய விசேஷ கருத்துக்கள்


பெண் என்பவள்

👩🏻 ஆதாமைப்போல் ஆண்டவரால் உருவாக்கப்படவில்லை, தாயின் கருவிலிருந்து பிறக்கவில்லை, இயேசுவைப் போல் கன்னியிடமிருந்தும் பிறக்கவில்லை பின் எப்படி?எலும்பிலிருந்து உருவாக்கப்பட்டவள் தானே ஏவாள். ஆகவே பெண்ணின் பிறப்பே அதிசயம் தானே!


பெண்

❤️ அன்பின் சிகரமாய், ஆறுதலின் உறைவிடமானவள்.

🕯️ எந்நிலையிலும், மெழுகாய் உருகுபவள்.

🤱🏻 குழந்தைகளைப் பெறுவது மட்டுமல்ல, உருவாக்குவாள்.

👨‍👩‍👧‍👦 குடும்பத்திற்கு குலவிளக்காய் திகழ்பவள்.

💐 அன்பு, அமைதி, சகிப்புத்தன்மை தன்னகத்தே கொண்டவள்.

🙇🏻‍♀️ கண்ணீரின் ஜெபத்தால், ஜெயத்தை பெறுபவள்.

👫 வெற்றிகரமான ஒவ்வொரு ஆணுக்கு பின்னும், விவேகமான பெண் இருக்கிறாள் என்பது மெய்தானே!


கடைசியாக பெண்களே!

🤷🏻‍♀️ஒரு பெண் நாணமென்னும், நற்குணத்தை மறக்கக்கூடாது.

🤷🏻‍♀️ வாய்ச்சொற்களைக் குறையுங்கள் அதற்காக வாய்மையைக் குறைத்துவிடாதீர்கள்.

🤷🏻‍♀️ உங்கள் மதிப்பை சொல்லால் அல்ல - செயலில் காட்டுங்கள்.

🌀 சோதனை சூறாவளி போல், சுழற்றி அடித்தாலும், சோர்ந்து போகாதீர்கள்.

🏃🏻‍♀ எல்லாவற்றையும் இழந்தாலும், எதிர்காலத்தை இன்னும் இழக்கவில்லை என, தேவனுக்காய் ஒடுங்கள்.

🧠விவேகமாய் நடந்து, நித்திய ஜீவனாகிய கிருபையை சுதந்தரித்துக் கொள்ளுங்கள்.


கர்த்தருக்கு பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள். நீதி 31:30