உப்பு
உப்பின் உபயோகம் அனைவரும் அறிந்ததே! தெரிந்ததே!
உப்பு "தானே" என அசால்ட்டாய் நினைக்கும் அனைவருக்கும் அந்த தானே என்பதின் தனித்தன்மையை அறிய ஒரு வாய்ப்பு.
எப்படி?
உப்புக்குப் பதில் எந்தப் பொருளையும் உபயோகிக்க முடியாது.
அதாவது:
சர்க்கரைக்கு பதில்- வெல்லம், கருப்பட்டி
மின்சாரம் cut ஆனால்- விளக்கு, மெழுகுவர்த்தி
பைக் இல்லையெனில் - சைக்கிள் (or) நடைப்பயணம்
Coffee இல்லையெனில் - Tea
இவை எல்லாவற்றுக்கும் மாற்றாக மற்றொன்று இருக்கின்றது.
ஆனால்
உப்புக்கு நிகர் உப்பே தான்!
ஆகவேதான், தனித்தன்மை வாய்ந்த உப்பையே ஆண்டவர் மனிதனோடு ஒப்பிட்டுப் பேசுகிறார். நல்ல தண்ணீரும் கூட நாளடைவில் கெட்டுவிடும்.
ஆனால்,
குப்பை, கூளம், அசுத்தங்கள் விழும் கடல்நீரோ காலாகாலமாய் கெடாமல் இருப்பது கடவுளின் படைப்பில் விந்தைதானே!
உலக சுகாதாரத்தையே பாதுகாக்கும் உப்பு போல, நாமும் எல்லா காரியங்களிலும் பிறருக்கு பிரயோஜனமுள்ளவர்களாய், ஆண்டவரை பிரதிபலிக்கும் பிள்ளைகளாய் வாழ்வோமா!
நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்
மத்தேயு 5: 13