தெரிந்து கொள்வோமா?
கடல் :எந்த ஒரு வண்டல், அழுக்குகளைகடல் ஒதுக்கிவிடாமல் தன்னுள் அரவணைத்துக் கொள்கிறது.அதுபோல, இயேசுவும் எந்த ஒரு பாவியான மனுஷனையும் தம் கிருபையின் கரத்தால் அணைத்துக் கொள்கிறார்.
கதிரவன் : ஒளி மிகுந்த விளக்குகள் எல்லாம் சூரிய ஒளியின் முன் ஒன்றுமே இல்லை. அது போல எவ்வளவு பெரிய மனிதனாயினும் தேவ பிரசன்னத்தில் தாழ்ந்து நிற்பது உண்மைதானே!
மழை: மழை மண்ணை நோக்கி கீழே விழுந்து பூமியை செழிப்படையச் செய்கிறது. அதுபோல, கர்த்தரின் கிருபை நம்மில் இருந்தால் எல்லாவற்றிலும் ஜெயமாய் வாழ முடியும்.
நெருப்பு: நெருப்பு பாரபட்சமில்லாமல் எல்லா பொருள்களையும் நெருப்பாகி விடுகிறது. அதுபோல் இயேசுவும் பாரபட்சமில்லாமல் அவரோடு
ஐக்கியமுள்ளவர்களை அவரைப்போல் பரிசுத்தமாக்கிவிடுகிறார்.