யார் இந்த எலும்பு அக்கா?
முதல் பெண்மணி; 3 எழுத்து பெண்மணி; உயிர் எழுத்தின் 8வது எழுத்து தான் இவளின் முதல் எழுத்து. யார்?
தனிமையை நீக்க வந்தவள்; தந்திரத்தால் சிறைப்பட்டவள். யார்?
"பசித்த பின் புசி" என்பது பழமொழி; இவளோ! பார்த்தவுடன் பறித்தாள்; பறித்தவுடன் புசித்தாள்; தேவ கட்டளையை மீறினாள். யார்?
கவர்ச்சி நிறைந்த பழத்தை பார்த்து, கடித்து, ருசித்து கணவனுக்கும் கொடுத்து கர்ப்ப வேதனை அடைந்தவள் யார்?
கர்த்தரால் வரும் சுதந்தரத்தை; கண்ணீருடன் பெற்று எடுக்க; காரணமான பெண் யார்?
மண்ணினால் உருவாக்கப்பட்ட மாப்பிள்ளைக்கு ஏதேனில் உருவாக்கப்பட்ட பொண்ணு; எலும்பு அக்கா. யார்?
கூப்பிட உதவும் வார்த்தை(ஏ), போரில் உபயோகிக்கும் கருவி (வாள்). பிறக்கவில்லை ஆனால் உண்டாக்கப்பட்டாள்! யார்?
பதில் : ஏவாள்